நவம்பர் 27ல் கிழிகிழின்னு கிழிக்க போகும் தர்பார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே கசிந்த செய்தியை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை தற்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
தர்பார் படத்தின் சிங்கிள் பாடலான சும்மா கிழிகிழி’என்ற பாடல் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் கூறும் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
இந்த பாடல் எஸ் பி பாலசுப்பிரமணியன் பாடியுள்ளதாகவும், விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் அனிருத் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். எனவே மீண்டும் ரஜினிக்கு எஸ்பிபி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது
வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்