வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (08:46 IST)

புதிய பிரதமர் பதவியேற்கும் நாளில் ரஜினி செய்யும் காரியம் இதுதான்!

மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மே 24 அல்லது 25ஆம் தேதிக்குள் முழு முடிவுகளும் வெளிவந்துவிடும். அதன்பின்னர் அரசியல் ஆட்டங்கள், கட்சி தாவல்கள், கூட்டணி உடைப்பு என பல களேபிரத்திற்கு பின்னர் மே 29ஆம் தேதி புதிய பிரதமர் தலைமையிலான புதிய ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அதே மே 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதால் புதிய பிரதமர் பதவியேற்கும் நாளில் ரஜினிகாந்த் இந்தியாலேயே இருக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இருந்து சமிபத்தில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஜினிகாந்த் மிகவும் எதிர்பார்ப்பது தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளைத்தான் என்றும், இந்த முடிவால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வந்தால் உடனடியாக கட்சி அறிவிப்பு வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.