வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (16:48 IST)

’’தினமும் குடித்துவிட்டு ரகளை....'’முன்னணி நடிகர் மீது போலீஸில் புகார்..

2021 ஆம் ஆண்டுப்  புதுவருடக் கொண்டாட்டத்தின்போது, ரகளையும் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஷ்ணு விஷாலில் அப்பா ( முன்னாள் போலீஸ் அதிகாரி) நடிகர் சூரியை மிரட்டியதாக அவர் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் மீது  வழக்குப்பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ரகளையில் ஈடுபட்டதாகவும், அவர் தினம்தோறும் தனது நண்பர்களுடம் குடித்துவிட்டு ரகளையில் ஈட்டுபட்டு வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் மீது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் சங்கம் சார்பில் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு சிசிடிவி காட்சி வெளியாகிறது. இதில், விஷ்ணு விஷால் போலீஸார் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் சினிமா  வட்டாரத்திலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.