1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (20:01 IST)

10 கிலோ உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய ஷிவாங்கி - டிப்ஸ் வேணுமா? கேளுங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால் அங்கு அடிக்கடி ரசிகர்களோடு கலந்துரையாடலில் ஈடுபடுவார்.புகைப்படங்களை கூட பதிவிடுவார். இந்நிலையில் தற்போது திடீரென 10 கிலோ உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். 
ஷிவாங்கி தினமும் உடற்பயிற்சி, பேட்மிண்டன் ஆகியவை விளையாடுவாராம். மேலும் வீட்டிலேயே சின்ன சின்ன வொர்க்கவுட்ஸ், யோகா என செய்து வருவாராம். அத்துடன் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த ஸ்கிப்பிங் சிவாங்கிக்கு பெரிதும் உதவியதாம். உணவு முறை என்று பார்த்தால், ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டு கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத உணவு மற்றும் பானங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவை நிறுத்தாமல் எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்துவிட்டராம்.