காதலிக்க நேரமில்லை படத்தின் பின்னணி இசைப் பணிகளைத் தொடங்கிய ரஹ்மான்!
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான காதலிக்க நேரமில்லை படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான என்னை இழுக்காதடி வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஜெயம் ரவியின் படங்கள் தோல்வி அடைவதால் அவர் இந்த படத்தைப் பெரிதும் நம்பியுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியுள்ள பின்னணி இசைப் பணிகளைத் தற்போது ரஹ்மான் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.