காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - நடிகை குஷ்பு
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். தற்போது அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அக்கட்சி சார்பில் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் காங்கிரஸ் கட்சியை கடுமையான விமர்சித்துள்ளார்.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இத்தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவ கபில் சிபில் விமர்சித்ததார். இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:
மக்களுக்கு சேவையாற்றும் தகுதியை காங்கிரஸ் இழந்து கொண்டுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சி கரைந்து கொண்டு வருகிறது. அக்கட்சி தன்னை வலுவாக நினைத்தாலும் மக்களிடத்தில் அது வலுவான சக்தி இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் காங்கிரஸ் இல்லாத பாராளுமன்றம் அமையும் எதிர்க்கட்சியாக வேறு கட்சியே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.