செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (12:35 IST)

50 கோடி வசூல் செய்த கோமாளி – படக்குழுவினர் மகிழ்ச்சி !

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு வெளியாகி தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர் வரை அனைவருக்கும் லாபம் கொடுத்த படத்தில் கோமாளி படமும் ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்க்கு புது ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்தார்.

இந்த படத்தின் வெற்றியால் மற்ற மொழிகளின் ஒட்டுமொத்த ரீமேக் உரிமைகளையும் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது கோமாளி படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜெயம் ரவியின் படங்களில் தனி ஒருவனுக்குப் பிறகு செய்த அதிக வசூலாகும்.