1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (22:41 IST)

விஜய் படத்துடன் கூடிய காபி கப்: மிக வேகமாக வைரலாகும் விஷயம்

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தை பற்றி தினமும் ஏதாவது புதிய தகவல் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது

அந்த வகையில் இன்று டிரெண்ட் ஆன விஷயம் என்னவெனில் விஜய் படத்துடன் வெளியாகியுள்ள காபி கப். பிரபல ஓட்டல் ஒன்றில் விஜய், கீர்த்தி சுரேஷ் படங்களுடன் கூடிய கப்பில்தான் காபி தருகின்றனர். இந்த விஷயம் தற்போது வெளியுலகத்திற்கு தெரிய வந்து அந்த ஓட்டல் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டது. மேலும் #coffeecupFromThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது

இந்த ஓட்டலின் உரிமையாளர் விஜய் ரசிகர் என்பதால் இந்த புதிய முயற்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதாகவும், இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.