திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (12:01 IST)

இப்ப மட்டுமில்ல அப்போவே அப்படிதான்.. ரோஜா பற்றி மன்சூர் அலிகான் பேசியதை பகிர்ந்த பத்திரிக்கையாளர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான கலைஞர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், அவர் தன் பேச்சில் தவறு இல்லை என பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மன்சூர் அலிகான் ரோஜா பற்றி இதுபோல அநாகரிகமாக அடித்த கமெண்ட் ஒன்றை இப்போது பகிர்ந்துள்ளார்.

அதில் “செம்பருத்தி படத்தில் மன்சூர் அலிகான் பேசும் ‘செம்பருத்தி என் சொத்து’ என்ற வசனம் பிரபலம். அந்த படம் ரிலீஸுக்கு பின்னர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மன்சூரிடம் அந்த வசனம் குறித்து பாராட்டி பேசினார் ஒரு பத்திரிக்கையாளர்.  அதற்கு மன்சூர் அலிகான் ”செம்பருத்தி என் சொத்துன்னு சொன்னேன். ஆனால் ரோஜாவ செல்வமணி தூக்கிட்டு போயிட்டாரே” என அநாகரிகமாக கமண்ட் செய்தார். மேலும் இதை அப்படியே வேண்டுமானாலும் பத்திரிக்கையில் எழுதிக்கோ என்றும் சொன்னார்”என செய்யாறு பாலு கூறியுள்ளார்.