செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 மே 2020 (08:30 IST)

ராய் லக்ஷ்மிக்கு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த "சிண்ட்ரல்லா" படக்குழு....!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம்  தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ். எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் .

இந்நிலையில் நேற்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடிய ராய் லக்ஷ்மிக்கு சிண்ட்ரல்லா படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். கண்ணாடி உடைத்துக்கொண்டு கை கிரீடம் கொடுப்பதை வாங்குவது போல் உள்ள இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது,