செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (14:46 IST)

எரிமலை மீது அமர்ந்து மிரட்டலான போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி...!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி அடுத்ததாக ‘சிண்ட்ரல்லா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. 
 
இப்படத்தில் சிண்ட்ரல்லாவாக ராய் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிக்பாஸ் சாக்ஷி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக உருவாகும் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ் இயக்குகிறார்.
 
அஸ்வமித்ரா இசையமைத்து வரும் சின்ட்ரெல்லா படத்திற்கு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்' என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிண்ட்ரல்லா படத்தில் சாக்ஷியின் மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.