புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (12:49 IST)

கோப்ரா படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் !

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல விக்ரம் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்த படங்களின் போஸ்ட் பணிகள் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும்  ’கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  

இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் Seven Screen Studio தங்களது ட்விட்டர் பக்கத்தில் கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். அதாவது,  " இப்படத்தின்  90 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டது என்றும் இன்னும் 25% படப்பிடிப்பு மட்டும் தான் பாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதுமுடிந்ததும் படத்தின் ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெறும்.