வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:34 IST)

’வேதாளம்’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

’வேதாளம்’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த திரைப்படத்துடன் கமல்ஹாசனின் தூங்காவனம் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
பில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த ரமேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அஜித் நடித்த கேரக்டரில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சிரஞ்சீவி பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
ஏற்கனவே மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லூசிபர் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது தெரிந்தே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் வேதாளம் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தல அஜித்தின் வேதாளம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது