வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (19:33 IST)

சார் மட்டும் ஜட்டியோட போஸ் கொடுப்பாரு... கலாச்சாரம் பற்றி பேசியவனை ஓடவிட்ட சின்மயி

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பெண்களை இழிவாக பேசிய நபர் ஒருவரை எதிர்த்து சின்மயி பொங்கியுள்ளார். 
 
பொள்ளாச்சியில், கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் பாலியல் இச்சைக்கு இணங்க வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செயப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து இணையவாசி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில், பெண்கள்தான் ஆண்கள் இந்த மாதிரி நடந்துக்கொள்ள காரணம். ஆனால், இப்போது ஆண்கள் மீது குற்றம் சுமர்த்துகிறீர்கள். பெண்களுக்கு எப்போதும் ஆண்களுடன் போட்டி போட வேண்டும் என்பதே எண்ணம். மேற்கத்திய கலாச்சரத்தை போல டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோக்களை வெளியிடுவது, வேண்டும் என்றால் அங்கே போய் இருங்கள் என தெரிவித்துள்ளார். 
 
அந்த நபரின் இந்த கருத்துக்கு பாடகி சின்மயி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த கலாச்சார போராளிக்கு எந்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். ஆனால், சார் மட்டும் ஜட்டியுடன் போச் கொடுப்பார். இதுதான் தமிழ் கலாச்சாரம் என அந்த நபரின் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.