1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (14:30 IST)

''தி லெஜண்ட்'' படத்திற்கு சென்சார் குழு சான்றிதழ்...ரன்னிங் டைம் தகவல்

Legend
லெஜன்ட் சரவணன் நடித்துள்ள லெஜண்ட் படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளனர்.

சரவணா ஸ்டோர்  நிறுவன தலைவர்  சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிரடி ஆக்சன் படமான இப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும், தமிழகத்தில் 650 தியேட்டர்களிலும்,, உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

மேலும், அதிகாலை 4 ம்ணி காட்சியும் உள்ளதால் அன்று நண்பகலுக்குள் இப்படத்தின்   நிலவரம் தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.