திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2019 (19:47 IST)

கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரபல காமெடி நடிகர் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தெலுங்கில் உருவான ’மாகாநடி’ என்ற படத்தில்  சாவித்ரி கதாப்பாத்திரத்தில்  நடித்தற்காக  மத்திய அரசால் அவருக்கு ’சிறந்த நடிகைக்கான ’தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் இவ்விருதினை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,  'தேசிய விருது பெற்ற அன்பு தங்கச்சி கீர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' எனப் பதிவிட்டு,  இதை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.