புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2019 (19:20 IST)

லட்சணமான புடவையில் தன்னடக்கத்துடன் விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ!

2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதிற்கு கீர்த்தி சுரேஷ் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இவர் மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவை பெற்றார் கீர்த்தி. 
 
இந்நிலையில் இன்று டெல்லியில் விக்யான் பவனில் நடைபெற்ற 66-வது தேசிய விருதுகள் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவித்தபடியே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு , மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் அடக்கமாக அழகிய புடவை அணிந்து வந்து வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து விருது பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.