1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (14:39 IST)

'லவ் டுடே’ இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை: போனிகபுர் அறிவிப்பு!

love today
அஜித் நடித்த  துணிவு உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி இருப்பதாகவும் இதனையடுத்து அவர் வருண் தவான் நடிக்க இருக்கும் லவ்டுடே ரீமேக் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் இந்த தகவலை மறுத்துள்ளார். லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்றும் அப்படி வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இத்திரைப்படம் ஹிந்தியில் எப்போது ரீமேக் ஆகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் லவ் டுடே படத்தின் ஹிந்தி உரிமையை வாங்குவதற்கு பலர் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran