திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (09:19 IST)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ‘போண்டா’ மணி… இப்போது எப்படி இருக்கிறார்?

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் போண்டாமணி. வடிவேலு குழுவினரோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியவர்.  இவர் சமீபத்தில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து இப்போது அவர் சிகிச்சையில் தேறி நலமுடன் உள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையைச் சேர்ந்தவரான போண்டா மணி பாக்கியராஜ் இயக்கிய ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.