1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மே 2022 (16:04 IST)

ராக்கி பாய் போல இருக்கணும்… சிறுவன் செய்த செயல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கேஜிஎஃப் ராக்கி போல இருக்கவேண்டும் என சிகரெட் பிடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார்.இந்த படத்தில் ராக்கியின் தோற்றம் மற்றும் அவரின் உடல்மொழி ஆகியவை ரசிகர்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ராக்கி பாயால் வெகுவாகக் கவரப்பட்டு அவரைப் போலவே ஸ்டைலாக கெத்தாக இருக்கவேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கேஜிஎஃப் படத்தில் யாஷ் தொடர்ந்து சிகரெட்கள் குடிப்பது போல அவரும் பெற்றோருக்கு தெரியாமல் சிகரெட் குடித்துள்ளார். இதனால் அவர் உடல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். அதையடுத்து அவரின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். இப்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்ட அவரிடம் மருத்துவர்கள் விசாரணை நடத்தியபோது அவர் இந்த விவரங்களைக் கூறியுள்ளார். இந்த செய்தி மருத்துவர்களுக்கும் அவரின் பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது.