வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 5 ஜனவரி 2019 (16:31 IST)

தல 59: அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை யார் தெரியுமா?

விஸ்வாசம் படம் பொங்களை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 
 
தல 59 படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆர்ட் டைரக்டராக கதிர் பணியாற்றவிருக்கிறார். 
 
அதோடு, இந்தியில் அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிப்பதாகவும், டாப்ஸி ரோலில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது அஜித்துக்கு ஜோடி யார் என்ற சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.  
 
ஆம், அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.