செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (09:41 IST)

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா! – தடுப்பூசி போட்டும் தாக்கியதாக தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் டெல்டா வகை கொரோனாவும், ஒமிக்ரானும் பரவ தொடங்கியுள்ளதால் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு சமீபத்தில் கொரோனா உறுதியானது. இந்நிலையில் தற்போது இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜான் ஆப்ரகாம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.