செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (20:06 IST)

விஜய் சேதுபதி நடிக்க இருந்த வில்லன் கதாபாத்திரம்…. இப்போ இவர்தான் நடிக்கிறாராம்!

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்த புஷபா படத்தில் இப்போது பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி, பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஒருசில நாட்கள் விஜய்சேதுபதி குறித்த காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து திடீரென விஜய்சேதுபதி விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் உறுதிசெய்துள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக ’புஷ்பா’ படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.