நடிக்காத படத்தில் என்னுடைய பெயர் - பாபி சிம்ஹா சொல்லும் பகீர் புகார்
நடிக்காத படத்தில் என்னுடைய பெயர் - பாபி சிம்ஹா சொல்லும் பகீர் புகார்
பாபி சிம்ஹா நடித்துள்ள கோ 2 படம் சென்ற வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாபி சிம்ஹா நடித்துள்ள, மீரா ஜாக்கிரதை என்ற படம் மே 27 வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அப்படியொரு பெயரில் நான் எந்தப் படமும் நடிக்கவில்லை என நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.
"நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பதிவு எண் 7871. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தினசரி நாளிதழில் நான் யார் என்று கேள்விபடாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை’ என்னும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்’ படத்தின் ஸ்டில்களை பயன்படுத்துகின்றனர்.
நான் ‘மீரா ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடித்ததும் இல்லை. டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகியாக கூறப்படும் மோனிகா அவர்களை நேரில் கூட பார்த்ததும் இல்லை. ஆகவே மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கித்தறும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த புகாரில் கூறியுள்ளார்.