நெல்சனுக்காக பிளடி பெக்கர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி!
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை முதலில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்க இருந்த நிலையில் அவர்கள் சொன்ன தொகை ஒத்து வராததால் நெல்சன் நேரடியாக கலாநிதி மாறனிடம் பேசி சன் தொலைக்காட்சியிடம் படத்தை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.