1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (20:57 IST)

பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் தமிழ் நடிகை! முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம்

பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் தமிழ் நடிகை!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று முதல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகை மோனல் கஜ்ஜார் என்பவர் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் ‘வானவராயன் வல்லவராயன்’ உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல தெலுங்கு படங்கலிலும் நடித்துள்ளார்.
 
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் தற்போது வரை அறிவிக்கப்பட்டிருக்கும் போட்டியாளர்கள் பின்வருமாறு 
 
சையது சோஹேல், அரியானாகுலோரி, தீதாடி (யூடியூப் பிரபலம்), கராத்தே கல்யாணி, நோயல் சீன், ஆங்கர் லாஸ்யா, மெஹ்பூப், நடிகை மோனல் கஜ்ஜார், தேவி நாகவல்லி, நடிகர் சூர்யாகிரண், 
 
 
1. நடிகை மோனல் கஜ்ஜார் 
2. இயக்குனர் சூர்யா கிரண்
3. ஆங்கர்  லாஸ்யா
4. நடிகர் அப்ஜீத்
5. ஆங்கர் ஜோர்தார் சுஜாதா
6. யூடியூப் பிரபலம் மெஹ்பூப் 
7. தொலைக்காட்சி செய்தி ரிப்போர்ட்டர் தேவி நாகவல்லி
8. ஹரிதா யூடியூப் நடிகை
9. நடிகர் சையத் சோஹெல்
10. ஆங்கர் அரியானாகுலோரி
11. நடன இயக்குனர், இயக்குனர் அம்மா ராஜசேகர்
12. குணசித்திர நடிகை கராத்தே கல்யாணி
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி அக்டோபர் 10ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அன்றைய தினம் போட்டியாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சி நடக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் விஜய் டிவி புரோமோ வீடியோ உடன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது