1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:42 IST)

100 நாளும் உள்ளேதான், யாரும் வெளியே வரமுடியாது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நிபந்தனை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு 4வது சீசனில் ஒரு சில புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும் என தெரிகிறது
 
கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பிக்பாஸ் நிர்வாகம் எடுத்துள்ளதாகவும், அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைவரும் 100 நாட்களுக்கு ஸ்டூடியோவை விட்டு வெளியே வர முடியாது என்றும் 100 நாட்களும் உள்ளேயே தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களும் தனியறையில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் 100 நாட்கள் முடிந்தவுடன் மட்டுமே அனைவரும் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என்றும் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அடுத்த நாளிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் தேர்வாகி விட்டதாகவும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் பிக்பாஸ் விட்டு வீட்டிற்கு அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது