1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:25 IST)

பிக்பாஸ் ப்ரொமோ அப்டேட் எப்போது வெளியாகும்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 5 ன் ப்ரோமோ இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை பிக்பாஸ் சீசன் 5ன் ப்ரோமோ வெளியிடப்  பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.