செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2025 (07:57 IST)

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்.. 2வது பெற்ற செளந்தர்யா..!

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முத்துக்குமரன் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 40 லட்சத்துக்கு மேல் பரிசு தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பெற்றுள்ளார்.

 இது குறித்த நிகழ்ச்சியை நேரடியாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி 24 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் மிட் வீக் எவிக்சன் என்ற பெயரில் ஜாக்குலின் வெளியேறினார். இதனை அடுத்து பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ராயான், சௌந்தர்யா என 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று நடந்த பிரம்மாண்டமான இறுதி போட்டியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூறப்பட்ட நிலையில் முத்துக்குமரனை டைட்டில் பட்டம் வென்றவர் இன்று விஜய் சேதுபதி அறிவித்தார்.

இதனை அடுத்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் குறித்து சௌந்தர்யா கூறிய போது ’எங்கே என்னை தேர்வு செய்து விடுவார்களோ என்று நான் பயந்தேன், முத்துக்குமரன்தான் இந்த டைட்டிலுக்கு தகுதியானவர், அவர் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்தார்.

Edited by Siva