திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 மே 2021 (10:43 IST)

நாலு வருஷமா நொய் நொய்ன்னு நோண்டுறீங்க...லைவ் வீடியோவில் கடுப்பாகி கத்திய ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் ஜுலி. பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் ஜூலி.
 
இதுவரை பிக்பாஸ் நாலு சீசன் முடிந்தும்  ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்ஸ் நிறுத்தவில்லை. இருந்தும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். 
 
அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றிருப்பது குறித்து லைவ் வீடியோ வெளியிட்ட ஜூலியை பார்த்து ஒருவர், நீயெல்லாம் ஒரு நர்ஸுனு சொல்லிக்காதே என கமெண்ட் செய்தார். 
 
அதற்கு கடுப்பாகிய ஜூலி, "நான் ஏன் சொல்லக்கூடாது? பிடிக்கலன்னா போங்க, உங்க வேலைய பாருங்க. நாலு வருஷமா ஏன் நொய் நொய்ன்னு நோண்டுறீங்க? அது வெறும் ஷோ அவ்ளோவ் தான். நீங்க என்ன திட்டினாலும் நான் அதை பெருசா எடுத்துக்க போறதேயில்ல நான் என் வேலைய பார்த்திட்டு போயிட்டே இருப்பேன் என நெத்தியடி பதில் கொடுத்து அவரை ஆஃப் செய்துவிட்டார்.