1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (14:09 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஜனனி போட்ட முதல் பதிவு!

இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த வாரம் வீட்டில் இருந்து விக்ஷன் செய்யப்பட்டு வெளியேறினார். அவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்தாலும் பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
இவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி தனது இன்ஸ்டாகிராமில்,  "என்னை பிக்பாஸ்  வீட்டிற்குள் இருக்க என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி...!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்... இந்த நாட்களில் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்... இந்த நிமிடம் முதல் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உங்களை மகிழ்விப்பேன்..! என பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு ரசிகர் ஒருவர், வணக்கம் ஜனனி, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆகி நாடு திரும்ப வேண்டும் என எதிர்பார்த்தேன் இருப்பினும் இவ்வளவு நாட்கள் BigBoss வீட்டில் இருந்ததே வெற்றி தான். எதிர்கால வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
 
வெளியில் எவ்வளவு எதிர் கருத்துக்கள் இருப்பினும் அவற்றை கடந்து செல்லுங்கள்.போற்றுவர் போற்றுவர் தூற்றுவர் தூற்றுவர் எனவே உங்கள் பாதையை சரியாக தேர்வு செய்து பயணிக்கவும். உங்கள் ரசிகனாக வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்ல வாழ்த்துகள். என  ஜனனிக்கு பல ரசிகர்கள் ஆறுதல் கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.