திருநங்கைகளை பாலியல் உறவுக்கு தள்ளுவதே பெத்தவர்கள் தான்!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று இசை வாணி , இமான் அண்ணாச்சி , ஸ்ருதி உள்ளிட்டர் தங்களது அனுபவங்களையும் கஷ்டமான நிலைகளையும் பகிர்ந்தனர்.
இந்நிலையில் இன்று நமீதா மாரிமுத்து ஒரு திருநங்கையாக தான் அனுபவத்தை இன்னல்களையும் அனுபவங்களையும் குறித்து கூறினார். அதில் திருநங்கைகளை பாலியல் உறவுக்கும் பிச்சை எடுப்பதற்கும் தள்ளப்படுவதே பெற்றோர்கள் தான். யாரேனும் குறை உடையவர்களாக இருந்தால் அவர்களை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என எனக்கு கற்றுக்கொடுத்து வளர்ந்த என் அம்மா என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அடித்து உதைத்து வெளியில் அனுப்பி விட்டார்கள் என கூறி கலங்கி அழுதார்.
அங்கிருந்தவர் நமீதாவுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், நீங்க தான் முதல் திருநங்கை போட்டியாளர். கெத்தா இருங்க..வாழ்த்துக்கள் என ஆடியன்ஸும் நமீதா மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.