வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (13:21 IST)

நம்ம கலர வச்சி ஒதுக்குறாங்க - மனம் குமுறும் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் எப்போது சண்டை ஆரம்பிக்கும் என காத்து கிடந்த ரசிகர்களுக்கு இன்று செம எண்டெர்டைன்மெண்ட் இருக்கு. இன்றைய முதல் ப்ரோமோவில் அவரவர் தாங்கள் திறமைகளை வெளிப்படையாக கூறி டைட்டில் வெல்ல தகுதியான ஆளு நான் தான் சென்று போட்டியிட்டு பேசுகின்றனர்.
 
அப்போது இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் என்ற இந்த டைட்டிலை ஒரு நகைச்சுவை காமெடியனான நான் வெல்லவேண்டும் என நக்கலாக சிரித்துக்கொண்டே கூற உடனே அங்கிருந்தவர்கள் செம கடுப்பாகி வருடன் சண்டை இழுக்கின்றனர். 
 
முதல் சண்டையே இமான் அண்ணாச்சியால் தான் வெடித்துள்ளது. இரண்டாவதாக வெளியான ப்ரோமோவில் ஸ்ருதி தன்னுடைய நிற கலரை வைத்து இங்கிருப்பவர்கள் டாமினேட் செய்வதாக இசை வாணியிடம் கூறி கலங்குகிறார். அவருடன் ஐக்கி பெர்ரியும் ஆறுதல் கூற நம்மள ஒதுக்குறாங்கன்னா நம்மள அவங்க செதுக்குறாங்கனு அர்த்தம் என கூறி சமாதானப்படுத்தினர். ஆக இன்றைய எபிசோடில் சண்டை , அழுகை, சமாதானம் என நவரசமும் எதிர்பார்க்கலாம்.