புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (10:39 IST)

முதல் நாமினேஷனில் வெளியேற போவது யார்? பரபரப்பான ப்ரோமோ வீடியோ!

பிக்பாஸ் 5 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நகைச்சுவை குறைவில்லாமல் இருப்பதால் ஆடியன்ஸ் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்காவின் காமெடி TRP'யை எகிறவைத்துள்ளது. 
 
இதற்கிடையில் நமீதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. 
 
நமீதா வெளியேறியதை தொடர்ந்து அடுத்ததாக யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் எவிக்ஷன் ப்ரொஸுக்கான நாமினேஷன் துவங்கியது. இதில் அபிஷேக்கை நாமினேஷனுக்கு கொண்டுவாங்கையா என ஆடியன்ஸ் எல்லோரும் ஒன்று கூடி கூப்பாடு போட்டு வருகின்றனர். ஆடியன்ஸ் மனதை கவர்ந்தவர்களாக பாவினி, அக்ஷ்ரா,  அண்ணாச்சி,  பிரியங்கா, தாமரைசெல்வி உள்ளிட்டோர் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ...