செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:47 IST)

ரியோவை சொன்னதும் நிஷாவுக்கு கோவம் வருதே - நீ கலக்கு பாலா!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து வருகின்றனர். வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களை 1 லிருந்து 16 வரை வரிசைப்படுத்திக்கொள்கின்றனர். தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கடைசியில் இருந்தது சுரேஷ் , சனம் ஷெட்டி , சம்யுக்தா, வேல்முருகன் , சோம் சேகர் , அர்ச்சனா என வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோவிலும் பாலா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையில் மீண்டும் சண்டை இருந்தது. வீட்டில் உள்ள ஆறு பேர் அர்ச்சனாவின் நடவடிக்கைளை எதிர்த்து அவரை 11வது இடத்தில் நிறுத்தினர். அதில் ஒருவரான பாலா, " அர்ச்சனா ஒருதலை பட்சமான நடந்துக்கொள்வதாக கூறினார். காரணம் என்னிடம் உன் கோவத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டு என்று சொன்ன அவர் ரியோவிடம் உன் கோவத்தை மாஸ்க் போட்டுக்கோடா என்று கூறினார்.

இப்படி ஒருத்தரின் கோபம் சரி என்று மற்றொருவரின் கோபம் சரியில்லை என்று எப்படி சொல்கிறார் என்பது புரியல...என்று கூறினார். பாலா இதை பேசும்போது நிஷாவின் முகத்தை பார்க்கணுமே. ரியோவுக்கு ஒன்னுனா அப்படியே பொறுக்கமுடியல... எது எப்படியோ... பாலா நீ சரியா தான் பேசுற... பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் ரியோ... ஆனால் அர்ச்சனா தான் வீட்டுல நாட்டாமை மாதிரி எல்லோரையும் ஆதிக்கம் பண்றாங்க. இன்று முழுக்க ஆடியன்ஸ் பாலாவிற்கு தான் சப்போர்ட் செய்துள்ளனர்.