திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (15:35 IST)

பாலாஜிக்கு செருப்பு அடி கொடுத்த ஜித்தன் ரமேஷ் - அப்போ கூட திருந்தமாட்டாங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் அதே பட்டிமன்றம் தொடர்ந்து கன்டினியூ ஆகிறது. இதில் பட்டமன்றத்திற்கு பேச சொன்னால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தையால் தாக்கிக்கொள்கின்றனர்.

இதில் தொகுப்பாளினி அர்ச்சனா நடுவராக பங்கேற்றுள்ளார். அவரே வந்த நாளில் இருந்து தன் மனதில் ராஜமாதா சிவகாமி என  நினைத்துக்கொண்டு அனைவரையும் அடக்கி ஆள்கிறார். இப்படி ஒரு நிலையில் நடுவராக அமர்ந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் ஓவராக தான் ஆடுவார்.

நேற்று சனம் ஷெட்டி - சுரேஷ் விவகாரத்தில் சனம் மரியாதையை குறைவாக அவன் இவன் என பேசியதை பாலாஜி கண்டித்தார். ஆனால், அவரே அப்படி தான் நடந்துக்கொண்டார். பாலாஜி சுரேஷை பார்த்து, யோவ் உங்கக்கென்ன மூளை குழம்பி போச்சா..? வயசு ஆக ஆக இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்குற என்று அவமரியாதையாக பேசியதை இன்று இந்த பட்டிமன்றத்தில் ஆரி சுட்டிக்காட்டினார்.  இருந்தும் இந்த ப்ரோமோ மொக்கையா தான் இருக்கு. அன்பான குடும்பமா அல்லது போட்டிகளமானு தெரியல. ஆனால், இன்னைக்கு எபிசோடு படு மொக்கையா இருக்க போகுதுன்னு மட்டும் தெரியுது.