ஏய் நீ வெளிய வாடா... சுரேஷை கெட்ட வார்த்தையால் திட்டிய சனம் ஷெட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாடா இல்லை காடா என்ற டாஸ்கின் இரண்டாவது நாளில் சொர்க்கபுரி ராஜா குடும்பம் மற்றும் மாயாபுரி அரக்க குடும்பம் என போட்டியாளர்களை இரண்டு கோஷ்டியினராக பிரித்து பயங்கரமான டெஸ்ட் வைத்துள்ளார் பிக்பாஸ்.
இந்த டாஸ்க்கின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களுக்கு வாக்குவாதம், சண்டை என நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மாயாபுரி அரக்க குடும்பத்தின் தலைவனாக இருந்த சுரேஷ் தற்ப்போது சொர்க்கபுரியில் இருக்கிறார்.
இதற்காக அரக்க வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச வம்சத்தினர் அடிமைப்படுத்தவேண்டும் இந்த டாஸ்கில் சனம் ஷெட்டிக்கும் சுரேஷிற்கும் இடையே தற்போது சண்டை வெடித்துள்ளது. ஆஜீத் மீது சனம் செட்டி ஸ்ப்ரே அடிக்க அதை பார்த்த சுரேஷ் சனம் ஷெட்டியின் தலையில் கொம்பால் அடித்துவிட்டார்.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சனம் ஷெட்டி சுரேஷை வாடா , போடா , அவன் இவன் என கெட்ட வார்த்தையில் கண்டமேனிக்கு திட்டிவிட்டார். சுரேஷே... காப்ரியல்லாவை தூக்கி வச்சி நீ வாங்குன பேரு எல்லாம் சனம் ஷெட்டி மேல நீ காட்டுற வெறுப்பும் அவங்கள டீஸ் பண்ற விதத்துலையும் மொத்தமா இழந்துட்டீங்க. ஏன்யா அவங்கள சும்மா சும்மா வம்புக்கு இழுக்கலனா உங்களுக்கு தூக்கம் வரலையா ?