பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது.... நாமினேஷனில் வசமா சிக்கிய அனிதா!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஆரம்பமாகியுள்ளது. இதில் வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் அனிதாவை நாமினேட் செய்துள்ளனர். அனிதாவை வெளியில் இருக்கும் ஆடியன்ஸ் பல பேருக்கு பிடிக்கவில்லை.
நேற்று அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில கமலிடமே எனக்கு ஸ்பேஸ் தரல என்று சொல்லிட்டாங்க. இதை கேட்டு பலரும் செம கடுப்பாகிவிட்டனர். அனிதா, சுசித்ரா, பாலா ஆரி உள்ளிட்டோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுசித்ரா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
பாலாவை நாமினேட் செய்த ஆரி, அவருக்கு காதல் கண்ணை மறைக்கிறது என கூறிவிட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் கமல் தவறுகளை தட்டி கேட்காமல் சிரித்து மழுப்பிக்கொண்டே முழு எபிசோடும் முடிந்துவிட்டது. உள்ள இருக்கிறவங்க தான் போர் என்றால் கமல் அதற்கு மேல இருக்கிறார் . நாகர்ஜுனா, சல்மான் கான் எல்லாம் ஏதாவது தப்பு செய்தால் கருணையே காட்டாமல் கோபப்பட்டு கண்டிக்குறாங்க. ஆனால், நீங்க எல்லாத்துக்கும் ஒரே சிரிப்புதான்...