1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (12:23 IST)

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் மோகன் வைத்யா- காரணம் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 துவங்கி நிகழ்ச்சி அடுத்தடுத்து சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க பல ப்ரோமோ வீடியோக்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது. முதல் ப்ரோமோவில் வனிதா விஜயகுமார் மற்றும் சாக்ஷி அகர்வாலும் பொங்கலுக்கு சண்டை போட்டார்கள். அதனை நெட்டிசன்ஸ் கிண்டலும் கேலியுமாக மீம்ஸ் உருவாக்கி வந்த நிலையில் சற்றுமுன்  2 வது ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 
 
இதில் பரத நாட்டிய கலைஞரும் இசைக் கலைஞருமான மோகன் வைத்யா கதறிய அழுகிறார். அவுஸ்மேட் அனைவரும் அவரை சமாதானம் செய்கின்றனர். இதற்கு முன் என் வாழ்வில் பாசம் மற்றும் பிரியத்துடன் என் வாழ்வில் யாரும் என்னுடன் இருந்ததில்லை. இதையெல்லாம் சொல்லி அழுவதற்கு கூட எனக்கு யாருமில்லை என கூறி கண்கலங்கி அழுகிறார். இதனை கண்ட மற்ற பிக்பாஸ் அவுஸ்ட்மேட் அனைவரும் ஒன்றுகூடி அவரை சமாதானம் செய்கின்றனர். இப்படியாக இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோ முடிகிறது.