1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (12:45 IST)

சும்மா இருப்பவர்களை அழைத்து வந்து இஷ்டப்பட்டவர்களுக்கு ஆதரவு சேர்க்கும் விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதை மக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஓட்டுக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கடுப்பான தர்ஷன் ஆர்மிஸ் விஜய் டிவி ஒரு ஃபேக் இனி யாரும் பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்றெல்லாம் கூறி வந்தனர். 


 
மக்களின் அந்த மனநிலையை மாற்ற தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை உள்ளே அழைத்து வந்துள்ளனர். அந்தவகையில் மோகன் வைத்யா,  ரேஷ்மா, மீரா மிதுன் , ஃபாத்திமா பாபு உள்ளிட்டோர் வந்துள்ளனர்.  அவர்களை அனைவரும் உள்ளே இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு பிடித்த பல கிஃப்ட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர். 
 
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் தர்ஷன் வெளியேற்றத்தை மறந்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க,  சும்மா இருப்பவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்து அவர்கள் விருப்பும் நபர்களை நல்லவர்களாக காண்பிக்க தான் இந்த டிராமா என கூறி வருகின்றனர்.