வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (15:08 IST)

தன்னை கிண்டலடித்தவர்களுக்கு சாக்ஷி கொடுத்த பதிலடி - குவியும் பாராட்டுக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருங்கி பழகி காதல் டிராமாவை அரங்கேற்றி வந்ததாலும் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியார்களை பற்றி புறம் பேசியதாலும் மக்களின் அதிக வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி. இதனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்ஷி பல இணையதள சேனல்களுக்கு பேட்டியளித்த வருவதும் அடிக்கடி தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்ககளை பதிவிட்டுவதுமாக இருந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு போஸ்டிற்கு மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் கிண்டல் செய்தனர். 
 
அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சாக்‌ஷி பதிவிட்டுள்ளதாவது:- “எனது டுவிட், எனது உரிமை.  தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொண்டு உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இந்த  ஜனநாயக நாட்டில் எனக்கு பேசும் உரிமை இருக்கிறது. நையாண்டி செய்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உங்களுக்கு உபயோகமான காரியத்தை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோயில் கட்டுங்கள்" என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் பலரும், இப்படி தைரியமாக முடிவெடுக்கும் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டில் கவின் பின்னால் காதலிக்குறேன்னு சொல்லி அழுதீங்க... இனி பேசி பிரையோஜனமில்லை மற்றவர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறி அட்வைஸ் செய்து வருகின்றனர்.