வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:02 IST)

ஓடி வாங்க, ஓடி வாங்க..! பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் பைத்தியம் ஆகிட்டாங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
இதில் வனிதா மற்றும் கஸ்தூரிக்கும் இடையில் சண்டை வலுத்துள்ளது. வனிதா வேணுமென்றே கஸ்தூரியை சண்டை இழுக்க திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார். வனிதாவை குண்டு என்று சொன்னதால் நேற்று ஆரம்பித்த சண்டை இன்று வரை நீள்கிறது. தற்போது கிச்சனில் சமைத்துக்கொண்டிருக்கும் கஸ்தூரியிடம் வனிதா வீண் வம்பு இ ழுகிறார். இதனால் கஸ்தூரி கோபப்பட்டு ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார். 
 
இதற்கிடையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு விலங்கு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேரன் நாய் போன்றும், முகன் குரங்கு போன்றும் , லொஸ்லியா , பூனை போன்று கத்துகிறார்கள். இடையிடையே வனிதா கஸ்தூரியின் சண்டை ஷாட் காண்பிக்கப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் நல்லா விவகாரமாகத்தான் ப்ரோமோவை எடிட் செய்திருக்கிறீர்கள் என கூறி கலாய்த்து வருகின்றனர்.