திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)

பெட்டு கட்டி தோற்றுப்போய் மீசையை எடுத்த கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் கமல் பங்கேற்கும் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
முக்கோண காதலுக்கு முடிவுக்கட்டவும், சேரன் - சரவணனின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கமல் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்குவாரா என பலரும் எதிர்பாத்திருந்த வேளையில் வந்துள்ள இந்த ப்ரோமோ வீடியோவில், " மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது குணங்கள் மாறலாம் மனங்கள் மாறலாம்.. இங்கே இனிமேல் முக்கோண காதலுக்கு வழியே இல்லை இனிமேல் எல்லாமே நட்பாகவே இருக்கும்னு பெட்டுக்கட்டி தோற்றுபோய் மீசையை எடுத்துட்டேன்னு நினைக்கலாம்.. ஆனால் அது இல்லை காரணம்.. அங்கே மாற்றங்கள் எதை நோக்கி நகர்கின்றன? இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது... என்பதை இன்று இரவு பார்க்கலாம் என்று கூறி புரியாத தமிழில் தன் உரையை முடிக்கிறார் கமல். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் " ஏதாவது புரியுதா பார்த்தீங்களா? இன்னைக்கு சனிக்கிழமைன்னு தெரிஞ்சும் ப்ரோமோ பார்க்க வந்தேன் பாரு என்னை செருப்பாலே அடிக்கணும் என்று நேசமணி வசனத்தை வைத்து கிண்டலத்து வருகின்றனர்.