பிரமாண்ட பட்ஜெட்...பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை !
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கடந்தாண்டு பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் வெளியானது. இப்படத்திற்கு மத்திய அரசின் விருது கிடைத்தது. அதன்பின்னர் தற்போது இரவின் நிழல்கள் என்ற படத்தினை இயக்கவுள்ளார்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஏ. ஆர்.ரஹ்மான், பார்த்திபன் இயக்கிவரும் இரவின் நிழல்கள் படத்திற்கு இசையமைத்துவருவதாகக் கூறினார்.
இதை இன்று பார்த்திபனும் உறுதி செய்தார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: அருமை!
அருமையில் - 3 பாடல்கள் கைவசம்
அருகாமையில் இன்னொன்று-promotional song
So...
So hhaappppyy எனப் பதிவிட்டுள்ளார். ரஹ்மான் பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.