என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தையின் இழப்பு பேரிழப்பு… பாரதிராஜா இரங்கல்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் இன்று இயற்கை எய்தியுள்ளார்.
திரைப்பட இயக்குனர், விடுதலை புலிகள் ஆதரவாளர், தமிழ் தேசிய ஆதரவாளர் என பலவாறாக அறியப்பட்ட சீமான் 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் எனும் கட்சியை தொடங்கினார். 2016 தேர்தலில் இருந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறார். இன்றைய நிலவரப்படி திமுக, அதிமுகவுக்குப் பிறகு அதிக வாக்குகளை வாங்கியக் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.
இந்நிலையில் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளார். அதுகுறித்து சீமானின் மேல் அளவற்ற பாசம் கொண்ட இயக்குனர் நடிகர் பாரதிராஜா என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். எனத் தெரிவித்துள்ளார்.