திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (07:50 IST)

சினிமாவில் 10 வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்தான்… பரத் பேச்சு!

நடிகர் பரத்தின் ஐம்பதாவது திரைப்படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள கடந்த ஆண்டே முதல் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க, மற்ற முக்கிய வேடங்களில் கேஎஸ் ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜூலை 28 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அதையொட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கொலை திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பரத் “சினிமாவில் தொடக்கம் நன்றாக அமைந்தாலும் போக போக கடினமானதாக இருக்கும். சினிமாவில் 10 ஆண்டுகள் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயம்தான். நான் இதுவரை நடித்த 50 படங்களில் சில படங்களில் சொதப்பி இருப்பேன். தற்போது சினிமா ஓடிடி, தியேட்டர் என இரண்டாக பிரிந்துவிட்டது. அதைப் பற்றி பேசினால் பெரிய விவாதமே ஆகிவிடும்” எனப் பேசியுள்ளார்.