புதன், 26 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:05 IST)

மாதவனே பெட்டர்... விக்ரமுக்கு நாமம் போட்ட சாய் பல்லவி

விக்ரமுக்கு ராசி சரியில்லை. அவர் விரும்புகிற நாயகிகள் ஒருவர் பின்னால் ஒருவராக விலகி வருகின்றனர். காஜல்  அகர்வாலுடன் நடிக்க விரும்பினார், அது நடக்கவில்லை. விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்தனர். அவரும் விக்ரம் படம் வேண்டாம் என்று விலகியுள்ளார்.

 
விக்ரம் படத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் ஒப்பந்தம் போட்டு 15 லட்சம் அட்வான்சும் அளித்தனர். அப்படியிருந்தும் அவர்  விலகியுள்ளார். காரணம் மாதவன்.
 
துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளிவந்த மலையாளப் படம், சார்லியின் தமிழ் ரீமேக்கில் மாதவனுடன் நடிக்க சாய்  பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியதால்தான் அவர் விக்ரம் படம் வேண்டாம் என்று  முடிவெடுத்தார். விக்ரமா, மாதவனா என்ற சாய் பல்லவியின் தராசில் மாதவன் பக்கமே எடை சாய்ந்திருக்கிறது.
 
இப்போது சாய் பல்லவிக்கு பதில் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.