செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:04 IST)

பெல்பாட்டம் படத்துக்கு தடை விதித்த நாடுகள்! ஏன் தெரியுமா?

அக்‌ஷய் குமார் நடித்துள்ள பெல் பாட்டம் திரைப்படத்தினை குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலங்களில் இதுவரை 915 திரையரங்குகள் முன்பதிவு செய்துள்ளன. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகும் மிகப்பெரிய படமாக பெல்பாட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலிஸானது.

எதிர்மறையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வரும் நிலையில் படத்தை குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் படத்தை தடைவிதித்துள்ளன. உண்மைக்குப் புறம்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதால் தடைவிதிக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.