ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:01 IST)

நெற்றிக்கண் ரீமேக்கில் அனுஷ்காவா? கிளப்பிவிட்டது யார்யா?

நடிகை அனுஷ்கா நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் என்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க ஒரு சில நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அந்த தகவலில் சுத்தமாக உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. நெற்றிக்கண் படமே அட்டர் ப்ளாப் ஆகிவிட்டதால் அந்த படத்தை ரீமேக் செய்ய யாராவது ஒத்துக் கொள்வார்களா என ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.