சென்னையில் நேற்று ‘பீஸ்ட்’, ‘கே.ஜி.எஃப் 2’ வசூல் எவ்வளவு?
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே
இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் நேற்று சென்னையில் மட்டும் பீஸ்ட், கே.ஜி.எஃப் 2 ஆகிய திரைப்படங்களுக்கு கிடைத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி சென்னையில் மட்டும் 2 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் நேற்று 1.61 கோடி ரூபாய் வசூல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதேபோல் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் நேற்றைய முதல் நாளில் சென்னையில் மட்டும் 67 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது